Aala Pol Vela Pol Song Lyrics in Tamil

Aala Pol Vela Pol Song Lyrics in Tamil from Ejaman Movie. Aala Pol Vela Pol Song Lyrics has penned in Tamil by Vaali and Music by Ilayaraja.

பாடல் வரிகள்

பெண்: ஆலப்போல் வேலப்போல்
ஆலம் விழுதுபோல்
மாமன் நெஞ்சில் நானிருப்பேனே

பெண்: நாலப்போல் ரெண்டபோல்
நாளும் பொழுதுபோல்
நானும் அங்கு நின்றிருப்பேனே

பெண்: பதில் கேளு அடி கண்ணம்மா
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா
என்னம்மா கண்ணம்மா ஹோய்

பெண்: ஆலப்போல் வேலப்போல்
ஆலம் விழுதுபோல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே

பெண்: எம்மனச மாமனுக்கு
பத்திரமா கொண்டு செல்லு
இன்னுமென்ன வேணுமுன்னு
உத்தரவு போடச் சொல்லு

ஆண்: கொத்து மஞ்சள்தான் அரைச்சி
நித்தமும் நீராடச் சொல்லு
மீனாட்சிக் குங்குமத்த
நெத்தியில சூடச் சொல்லு

பெண்: சொன்னத நானும் கேட்குறேன்
சொர்ணமே அங்க போய் கூறிடு
ஆண்: அஞ்சல மால போடுறேன்
அன்னத்தின் காதுல ஓதிடு

பெண்: மாமன் நெனைப்புத்தான்
மாசக்கணக்கிலே
பாடாபடுத்து என்னையே
புது பூவா வெடிச்சதென்னையே

ஆண்: ஆலப்போல் வேலப்போல்
ஆலம் விழுதுபோல்
ஆசைநெஞ்சில் நானிருப்பேனே

பெண்: நாலப்போல் ரெண்டபோல்
நாளும் பொழுதுபோல்
நானும் அங்கு நின்று இருப்பேனே

ஆண்: வேலங்குச்சி நான் வளச்சி
வில்லுவண்டி செய்ஞ்சு தாறேன்
வண்டியிலே வஞ்சி வந்தா
வளச்சி கட்டி கொஞ்ச வார்றேன்

பெண்: ஆலங்குச்சி நான் வளச்சி
பல்லக்கொன்னு செய்ஞ்சுதாறேன்
பல்லக்குல மாமன் வந்தா
பகல் முடிஞ்சி கொஞ்ச வாறேன்

ஆண்: வட்டமாய் காயும் வெண்ணிலா
கொல்லுதே கொல்லுதே ராத்திரி
பெண்: கட்டிலில் போடும் பாயும்தான்
குத்துதே குத்துஊசி மாதிரி

ஆண்: ஊரும் உறங்கட்டும்
ஒசை அடங்கட்டும்
காத்தா பறந்து வருவவேன்
புதுபாட்டா படிச்சி தருவேன்

பெண்: ஆலப்போல் வேலப்போல்
ஆலம் விழுதுபோல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே

பெண்: நாலப்போல் ரெண்டபோல்
நாளும் பொழுதுபோல்
நானும் அங்கு நின்றிருப்பேனே

ஆண்: பதில் கேளு அடி கண்ணம்மா
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா
என்னம்மா கண்ணம்மா ஹோய்

ஆண்: ஆலப்போல் வேலப்போல்
ஆலம் விழுதுபோல்
ஆசைநெஞ்சில் நான் இருப்பேனே

பெண்: நாலப்போல் ரெண்டபோல்
நாளும் பொழுதுபோல்
நானும் அங்கு நின்று இருப்பேனே

Leave a Comment

close